இந்தத் தீபாவளிக்கு ஒரு பத்து நாளைக்கு முன்னாடி, ஒரு ஞாயித்துக்கிழமை காலையிலே என் சம்சாரம் சேவல் ஒண்ணெ விலைக்கு வாங்கினாள்.கோழிக்காரனோ அது ஒன்னரைக்கிலோ சுமார் வரும் ரூ 400.க்கு கம்மி குடுக்கமாட்டேன்னான். அப்போ ரண்டு பேருக்கும் பேரம் நடந்துச்சு பாருங்க கேக்கறதுக்கே தனி சுவாரஸ்யம்.இவள் ஒரு காரணம் சொல்லி முந்நூறுக்கு கேக்கறதும்...அவன் ஒரு காரணம் சொல்லி முந்நூத்தி ஐம்பது குடுங்கன்னு சொல்றதும்..இல்லெயில்லெ கடைசியா முந்நூத்திஇருபதுன்னு பேசி முடிக்கறக்குள்ளெ, எனக்கு கண்ணாமுழி பிதுங்கிப்போச்சு. "அட..நாம ரண்டு பேருதானே வீட்ல இருக்கோம்...இவ்ளோ பெரிய சேவல் எதுக்கு? பேசாம தீபாவளியன்னக்கி கடைக்கிப்போயி அரைக்கிலோ கோழிக்கறி எடுத்துட்டு வந்தா தீந்துபோச்சு".அப்படின்னேன். " அட..பெரியபையன் அபுதாபியில இருக்கான்.ஆனா சின்னப்பையன் சென்னையிலிருந்து தீபாவளிக்கு வர்றானில்ல, கோழிபிரியாணி..வருவல்னு சூப்பசரா செஞ்சு குடுக்கத்தான் நாட்டுச்சேவல் வாங்குனேன்.பின்ன ஐயாவுக்குத்தான், இதையெல்லாம் வாங்குறேன்னு நினைப்பாக்கும் ...ஹூம்.." அப்பபிடின்னு நக்கலா மோவாயால தோள்பட்டையை இடிச்ச...
This is a compilation of interesting stories,good quotes all taken from sources like Internet,Face Book etc. செய்திகள்.குட்டி கதைகள்,புகைப்படங்கள் சில நம் மனதினை தொட்டுவிடும்.ரசித்து படித்திட இந்த வலைப்பதிவு