தையது வளர்ந்தால்...
ஆட்டுக் குட்டி வந்ததே.
பாட்டுப் பாடி வந்ததே
வளரும் பயிரைப் பார்த்ததே
வாயை வைக்கப் போனதே
குட்டிப் பெண்ணும் பார்த்தாளே
எட்டி சட்டென பாய்ந்தாளே
கயிறைப் பிடித்து இழுத்தாளே
பயிருக்கு காவலாய் இருந்தாளே
கயிறைப் பிடித்து இழுக்காதே
உயிரே போகுது விலக்காதே
வயிறோ மிகவும் பசிக்கிறதே.
பயிரோ செழித்தும் இருக்கிறதே
வளர்ந்த மரத்தின் இலைகளையே
அம்மா தருவாள் கலங்காதே
சின்னத் தையது வளரட்டுமே
விண்ணை உரச உயரட்டுமே
அதுவரை எனக்கு உணவெங்கே
பசிக்கும் வயிறுக்குப் பதிலெங்கே
மெதுவாய் கண்கள் கலங்கினவே
விதும்பும் ஓசையும் கேட்டதுவே
தையது வளர்ந்தால் பயனுண்டே
தலைமுறை தலைமுறை உணவாமே
கொளுத்தும் கோடை வெயிலினிலே
குளிர்ந்த நிழலையும் தந்திடுமே
ஜி. ராஜேந்திரன்
Rajendren Thamarapura
ஆட்டுக் குட்டி வந்ததே.
பாட்டுப் பாடி வந்ததே
வளரும் பயிரைப் பார்த்ததே
வாயை வைக்கப் போனதே
குட்டிப் பெண்ணும் பார்த்தாளே
எட்டி சட்டென பாய்ந்தாளே
கயிறைப் பிடித்து இழுத்தாளே
பயிருக்கு காவலாய் இருந்தாளே
கயிறைப் பிடித்து இழுக்காதே
உயிரே போகுது விலக்காதே
வயிறோ மிகவும் பசிக்கிறதே.
பயிரோ செழித்தும் இருக்கிறதே
வளர்ந்த மரத்தின் இலைகளையே
அம்மா தருவாள் கலங்காதே
சின்னத் தையது வளரட்டுமே
விண்ணை உரச உயரட்டுமே
அதுவரை எனக்கு உணவெங்கே
பசிக்கும் வயிறுக்குப் பதிலெங்கே
மெதுவாய் கண்கள் கலங்கினவே
விதும்பும் ஓசையும் கேட்டதுவே
தையது வளர்ந்தால் பயனுண்டே
தலைமுறை தலைமுறை உணவாமே
கொளுத்தும் கோடை வெயிலினிலே
குளிர்ந்த நிழலையும் தந்திடுமே
ஜி. ராஜேந்திரன்
Rajendren Thamarapura
Comments
Post a Comment