Skip to main content

Semai Joke

இது எப்படி இருக்கு ?
-------------------------------------
சம்பா பாட்டி என்கின்ற சம்பகலட்சுமி பாட்டியை கண்டால் சீனுவின் நண்பர்கள் அனைவருக்குமே ஒரு வித பயம் தான்.பாட்டி இத்தனைக்கும் ரொம்ப நல்லவள். ஆசையோடு கேட்கின்ற பலகாரங்களையும் பண்ணிகொடுப்பவர் தான். ஒருமாத காலமாய் கச்சபேஸ்வரன் தாத்தா பாபநாசத்தில் இருக்கிறார்.ஊரில் இருந்த ஓரிரண்டு மஞ்சக்காணியை எப்படியும் விற்றுவிட்டு வருவதாகத்தான் யோசனை. காலையில் சாதம் வெடிப்பதற்கு எடுத்த அந்த உள்பாத்திரம் குக்கருக்குள் மாட்டிக்கொண்டுவிட்டு எடுக்கவே முடியவில்லை. மூடியை திறக்கவும் முடியவில்லை எடுக்கவும் முடியவில்லை.அவள் சக்திக்கு ஏதேதோ கிடுக்கியை வைத்து, தோசை திருப்பியை வைத்து தட்டி பார்த்தாள், வெளியே வரும் சுவடே தெரியவில்லை.
டேய் சீனு இதை எடுத்து கொடுன்னு சொன்னவுடன் ரெண்டு நிமிஷம் பார்த்துவிட்டு , இதெல்லாம் முடியாது பாட்டி, போய் பாலாஜி ஏஜென்சில கொடுத்து பாருன்னு டி வி யில் மூழ்கி விட்டான். சம்பா பாட்டி விட மாட்டாள்.
ஏண்டா நீ மெக்கானிக்கல் என்ஜினியரிங் தானே படிச்ச? ஏன் வர்ற மாட்டேங்குது ? எங்க தட்டணும்?. சூடு பண்ணினா இளகிக்குமான்னு யோசிக்க வேண்டாமா? அந்த மேல் ஸ்க்ரூவை கழட்டினா வருமா? அதன் நெளிவு சுளிவு, கீழ் பாத்திரத்துக்கும் மேல் பாத்திரத்துக்கு இடைவெளி எவ்வளவு, எல்லாமே கணக்கு தானே, அனலைஸ் பண்ணவேண்டாமா இது மெக்கானிக்கல் இல்லையா?
அது வேற இது வேற பாட்டி , உனக்கு புரியாது என்று வாயடைத்து விடுவான்.
உங்க தாத்தா இருந்தா ஒரு நிமிஷத்துல எடுத்து கொடுத்துடுவார், அவர் ஊர்ல உட்கார்ந்துண்டுருக்கார். என்னமோ போ.
இன்னொரு நாள் இப்படி தான் சீனு தன் நண்பர்களுடன் மேட்ச் பார்த்துக்கொண்டிருந்தபோது கரெண்ட் போய் விட்டது. அக்கம் பக்கத்தில் எல்லோர் வீட்டிலும் கரெண்ட் இருக்கிறது.. கீழே போய் நம்ம வீட்டுல ஃப்யூஸ் போயிருக்கா பார்றான்னு சொன்ன நேரம் பக்கத்து வீட்டு வாசு வந்தான், அவன் நேரம் சரியில்லை. டேய் வாசு , கீழே போயி இந்த ஃப்யூசை போட்டுகொடுறா..அடிக்கடி போயிடறது..
பாட்டி நான் இதெல்லாம் போட்டதில்லை பாட்டி.
என்னடா , உங்க அம்மா அஞ்சு லட்சத்தை கொடுத்து எலெக்ட்ரிக்கல் என்ஜினியரிங் சேர்த்துருக்கேன்னு சொன்னா, இதெல்லாம் உனக்கு அங்கே சொல்லித்தரதில்லயா? ரெண்டு வயரை முடுக்கி மாட்டறதுக்கு என்னடா பயம்?
அது இல்லீங்க பாட்டின்னு பதில் சொல்ல தெரியாம இழுத்தான்.
என் பேரன் சீனுவை போன மாசம் ஒரு குண்டு பல்பு மாத்த சொன்னேன். ரப்பர் செருப்பை கொண்டா, மர ஸ்டூலை கொண்டான்னு எத்தனை ஆகாத்தியம், என்னைத்தான் வேலை ஏவினான். நானே போட்டுருவேன், இந்த வயசுல ஸ்டூல்ல ஏறி விழுந்துட்டா கஷ்டம்.
இந்த கம்ப்யூட்டர் ஒரு வாரமா வேலை செய்யலை, இதை சித்த பாருடான்னு உங்க தோஸ்த் வருவானே ஐ ஐ டி , ஸ்ரீராம்ட்ட சொன்னேன். எல்லாத்தையும் பார்த்துட்டு இது ஹார்டுவேர் பிராப்ளம், நான் சாஃப்ட்வெர் தான் படிக்குறேங்கறான். கம்ப்யூட்டர்னா ரெண்டும் கிடையாதோ? பாட்டி கேள்விகளுக்கு பதில் சொல்ல பயப்பட்டே சீனுவின் நண்பர்கள் வாசலோடு வந்து ஓடிப்போய்விடுகிறார்கள்.. கோபி ஒருத்தன்தான் வீட்டுக்குள் தயக்கமில்லாமல் வருகிறான், காரணம் அவன்
பி காம் கடைசி வருஷம் படிக்கிறான். அவனுக்கும் சோதனை வேறு ரூபத்தில் வந்தது.
ஏண்டா கோபி நாலரை சதவிகிதம் வட்டி ஆறுமாசத்துக்கு போட்டா நானூத்தி இருபது ரூபாய் தானே வரணும், பின்ன ஏன் மாமா பென்ஷன் பாஸ்புக்குல இருநூத்தி நாப்பது ருபாய் வரவு வச்சுருக்கான்னு கேட்டது முதல் கோபியும் ஜூட்..
இவாள்ளாம் என்ன படிக்கறாளோ, லட்சக்கணக்குல செலவு மட்டும் ஆறது.. எங்காத்து மாமா வெறும் எஸ் எஸ் எல் சி தான். குக்கர் ரிப்பர் ஆகட்டும், தண்ணி மோட்டார் ஏர் லாக் ஆகட்டும், எலெட்ரிக் வேலையாகட்டும் அத்தனையும் அவரே செஞ்சுடுவார். காலாணா செலவு கிடையாது..அவர் ரிட்டையர் ஆகறச்சே அவருக்கு ஆயிரம் ரூபாய் தான் சம்பளம் கொடுத்தா இவாளுக்கெல்லாம் முதல் மாசமே முப்பதாயிரம் ரூபாய் சம்பளம்னு பேப்பர்ல போடறான்.
என்ன படிப்போ? ஒண்ணும் புரியலப்பா ஈஸ்வரா !!!
Courtesy: what's up share

Comments

Popular posts from this blog

சுண்டெலிக்கும் சுண்டெலிக்கும் திருமணமாம்,

சுண்டெலிக்கும் சுண்டெலிக்கும் திருமணமாம், இரவில் சோளத்தட்டைப் பல்லாக்கிலே ஊர்வலமாம்; சுண்டெலிக்கும் சுண்டெலிக்கும் திருமணமாம், இரவில் சோளத்தட்டைப் பல்லாக்கிலே ஊர்வலமாம்; நொண்டிக் காலு நண்டுப் பொண்ணு நாட்டியமாம், நொறத் தவளை மேளதாள வாத்தியமாம்; நொண்டிக் காலு நண்டுப் பொண்ணு நாட்டியமாம், நொறத் தவளை மேளதாள வாத்தியமாம்; தொண்டையில்லாக் கோட்டானும் சுதிய விட்டு பாடிச்சாம்; தொண்டையில்லாக் கோட்டானும் சுதிய விட்டு பாடிச்சாம், கண் சிமிட்டி மின்மினியும் காந்த லைட்டு போட்டுச்சாம்; கண் சிமிட்டி மின்மினியும் காந்த லைட்டு போட்டுச்சாம்; சுண்டெலிக்கும் சுண்டெலிக்கும் திருமணமாம், இரவில் சோளத்தட்டைப் பல்லாக்கிலே ஊர்வலமாம்; நஞ்சை வயல் சேறு அங்கே சந்தனமாம், நத்தா கூட்டு தண்ணீரே பன்னீராம்; நஞ்சை வயல் சேறு அங்கே சந்தனமாம், நத்தா கூட்டு தண்ணீரே பன்னீராம்; புஞ்சைக் காட்டு குருவித் தாழை, போட்டுக் கொள்ள வெத்தலையாம்; புஞ்சைக் காட்டு குருவித் தாழை, போட்டுக் கொள்ள வெத்தலையாம்; வந்திருந்த கும்பலுக்கு சோறு மட்டும் பத்தலையாம்; வந்திருந்த கும்பலுக்கு சோறு மட்டும் பத்தலையாம்; சு...

உண்மை காதல் ( I LOVE YOU ) - நகைச்சுவை கதை.

நீங்கள் இரசித்த நகைச்சுவை ஒன்றைப் பகிர முடியுமா? (கதையாக /அனுபவமாக) உண்மை காதல் ( I LOVE YOU ) - நகைச்சுவை கதை. ஒரு லேடீஸ் கிளப் கூட்டதில் வந்திருந்த நடுவர் அங்கிருந்த பெண்களை நோக்கி, " நீங்கள் உங்கள் கணவரிடம் எப்பொழுது கடைசியாக "I LOVE YOU" என்று சொன்னீர்கள் என்று கேட்டார். ஒரு பெண்... இன்று என்று கூறினாள் அடுத்த பெண் .. இரண்டு நாட்கள் முன் என்று கூறினாள் ஒரு சிலர் .. ஒரு வாரம் முன்பு என்று கூறினார்கள். நடுவர் : " நீங்கள் அனைவரும் அவரவர் கணவருக்கு "I LOVE YOU" என்று மெசேஜ் அனுப்புங்கள் இப்பொழுது, யாருக்கு வியப்பான பதில் வருகிறதோ அவர்களுக்கு ஒரு சிறந்த பரிசு காத்திருகிறது" என்றார். ஒவ்வொருவரும் அவரவர் கணவருக்கு மெசேஜ் அனுப்பத் தொடங்கினார்கள். மெசேஜ்க்கு வந்த பதில்கள் நபர் 1 : அன்பே.... உனக்கு உடம்புக்கு ஒன்னும் பிரச்சனை இல்லையே ?? நபர் 2 : இன்னைக்கு நீ சாப்பாடு செய்யலியா?? நபர் 3 : நான் குடும்ப செலவுக்கு குடுத்த பணம் தீர்ந்து விட்டதா?? நபர் 4 : என்ன பிரச்சனை...

Thamizh Poem