மாமரமும் சிறுவனும்
ஒரு ஊரில் ஒரு சிறுவன் நண்பர்களோட விளையாடிக்கொண்டு இருந்தான் அப்போது அங்கே இருந்த மாமரம் ஒன்று அச்சிறுவனை அழைத்து தம்பி இங்கே வா நீ விளையாடி கலைத்து இருப்ப என்னுடைய கிளைகளை உளுகுகின்றேன் கீழே விழும் பழத்தை எடுத்து சாப்பிடு என்றது சிறுவனும் கீழே விழுந்த பழத்தை எடுத்து சாப்பிட்டான், பிறகு மாமரமும் அந்த சிறுவனும் தினமும் விளையாட போகும் போது,அந்த மாமரத்திடம் சென்று பேசுவான் மாமரம் கொடுக்கும் பழத்தை சாப்பிட்டு செல்லவது வழக்கம்,பிறகு அச்சிறுவன் சிலநாட்களாக அந்த மரத்தின் பக்கம் வரவே இல்லை, என்ன சிறுவன் நம்மிடம் வந்து பேசி நம்மிடம் பழம் வாங்கி சாப்பிட்டு விளையாடிவிட்டு தானே செல்வான் என்ன ரொம்ப நாளா சிறுவனை காணோமே என்று தினமும் அந்த மாமரம் அந்த சிறுவன் வருவான் என்னிடம் பேசுவான் என்று எதிர்பார்க்கும்,ஒரு நாள் அவன் அந்த மரத்தை நோக்கி வந்தான்,மாமரம் அவனிடம் என்ன ரொம்ப நாளா ஆளே காணோம் என்றது, அதற்கு அந்த சிறுவன் இல்ல நான் முன்ன மாதிரி இல்ல வளந்துட்டேன் நான் ஒன்னும் சின்ன பிள்ளை இல்லை எங்கவீட்டில் விளையாட அனுமதிபதில்லை என்றான்,பிறகு அந்த மாமரம் எதற்காக என்னை பார்க்க வந்த என்றது,இல்ல எனக்கு உன்னுடைய கிளைகள் கொஞ்சும் வேண்டும் மட்டை பந்து கிரிக்கெட் விளையாட மட்டை பேட் செய்யணும் என்றான்,அவ்வளவு தானா எடுத்துகொள் என்றது மாமரம் சிறுவனும் மாமரத்தில் உள்ள கிளைகள் சிலவற்றை எடுத்துக்கொண்டு சென்றான்.சில நாட்கள் ஆனது அந்த சிறுவன் மாமரத்து பக்கம் வரவே இல்லை, மாமரம் அவனை நினைத்தது என்ன அந்த சிறுவன் நம்மை பார்க்க வருவான் வரவே இல்லையே என்றது மாமரம் பிறகு ஒரு நாள் முன்னலாம் என்னை பார்க்க வருவ மாம்பழம் சாப்டுவே என்னுடன் விளையாடுவே என்றது அவன் சொன்னான் நான் நான் முன்ன மாதிரி இல்ல இப்போ நான் சிறுவன இல்லை் எனக்கே குழந்தைகள் பிறந்து அவங்கள் பெரிய பசங்கலாயிட்டாங்க அவங்களை எல்லாம் உன்னிடம் விளையாட அனுமதிக்க மாட்டேன் என்றான் சரி மாமரம் கேட்டது என்னிடமிருந்து உனக்கு என்ன வேண்டுமென்று அவன் சொன்னான் குடும்பத்தோட கடலுக்கு பீச்கு போறோம் எனக்கு படகு செய்ய மரம் வேண்டும் என்றான், மாமரம் வெட்டி எடுத்துகொள் என்றது அவனும் மாமரத்தில் பாதியை வெட்டி எடுத்துக்கொண்டு சென்றுவிட்டான் சில நாட்கள் ஆச்சு பிறகு அவன் மீண்டும் அந்த மாமரத்தை நோக்கி வந்தான் மாமரம் கேட்டது என்ன தம்பி நல்லா இருக்கியா என்றது அவனும் எனக்கு முன்ன மாதிரி எல்லாம் இல்ல வயசாயிடுச்சு நடக்க முடியல கைகால்கள் எல்லாம் வலிக்குது வெயிலும் வாட்டி வதைகின்றது என்றான்.மாமரம் என்ன தம்பி நான் பார்த்து வளர்ந்த சிறுவன் நீ உனக்கு இப்படி ஒரு நிலைமையா உனக்கு உதவலாம் என்றால் என்னில் இருந்த பாதியை நீ வெட்டி விட்டாய் இப்போது என்னிடம் இருப்பது என்னுடைய வேர்கள் மட்டும் தான் பரவாஇல்லை என்னுடைய வேர்கள் மீது தலையை வைத்து சற்று ஓய்வு எடுத்துகொள் என்றது அவனும் வேர்கள் மீது தலைவைத்து ஓய்வு எடுத்தான், மாமரமோ அவனை பிள்ளை போன்று வேர்களின் மீது [ மடியின் மீது ] படுக்க வைத்துகொண்டது.
மரம் வளர்ப்போம் நன்மைகள் அணைத்தும் பெருவோம் பெறுவோம் நன்றி.
Comments
Post a Comment