Skip to main content

Posts

Showing posts from January, 2021

எது? உலக அதிசயம்.

      எது? உலக அதிசயம். தாஜ் மஹாலை பார்க்க சென்று இருந்தேன். பார்த்து திரும்பி பஸ்ஸில் வரும் பொழுது தாஜ் மஹாலை விட அழகான ஒருகட்டிடம் உலகில் வேறு எதுவுமே இல்லை என்பதை போல் என்னுடன் பஸ்ஸில் பயணம் செய்தவர்கள் பேசி கொண்டார்கள். தாஜ்மஹால் மிக அழகான கட்டிடம்தான். அதை யாரும் மறுக்க முடியாது. ஆனால்? தாஜ்மஹால் மட்டும் தான் உலகில் அழகான கட்டிடமா? அதை விட அழகான ஒரு கட்டிடம் உலகில் வேறு எதுவும் இல்லையா. ஏன்? இல்லை. நிறையவே இருக்கிறது. சரி உலக அதிசயம் என்றால் என்ன? ஒன்று உருவான பின் அதே போல் ஒன்றை உருவாக்க முடியாது என்பது தான் உலக அதிசயம். நெல்லையப்பர் கோவிலில் கல் தூனை தட்டினால் ச, ரி, க, ம, ப, த, நி என்கிற ஏழுஇசை ஸ்வரங்கள் ஒலிக்கும். கல்லுக்குள் 7 ஸ்வரங்களை வைத்தார்களே. அது உலக அதிசயம். திருப்பூரில் உள்ள குண்டடம் வடுக நாத பைரவர் கோவிலில், குழந்தை தாயின் வயிற்றில் இருக்கும் பொழுது, குழந்தை இந்த, இந்த மாதத்தில் இந்த, இந்த வடிவத்தில். இவ்ளவு விதமான Positions ல இருக்கும் என்பதை பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கல்லில் சிற்ப்பங்களாக வடித்து வைத்துள்ளார்கள் என் முன்னோர்கள். அது உலக அதிசயம். ...

தரிசாய் போயிருப்பேன் --- அழகிய கவிதை

 

An Engineer & a Doctor

காபி பொடி டப்பா மூடியில் இவ்வளவு பெரிய சைக்காலஜியா?

 காபி பொடி டப்பா மூடியில்  இவ்வளவு பெரிய சைக்காலஜி யா⁉️ கற்பனைக் கதை அல்ல. அனைவருக்கும் பாடம் புகட்டும் அருமையான நிகழ்வு. கேரளாவில்  ஒதுக்குப்புறமா ஒரு ஊரு. அங்க 8 சென்ட்டுக்கு நடுவுல, மூன்று சென்டுல ஒரு  வீடு. வீட்டை சுத்தி தோப்பு. தொடர்ச்சியான பருவ மழையும், குளிர்ச்சியான கிளைமேட்டும் சேர்ந்து மரப்பட்டையில் பச்சையா பாசம் படிந்த மரங்கள். பாக்குற எல்லா பக்கமும் பச்சை பசேல்னு ஒரே குளிர்ச்சியா இருக்கும். இந்த வீட்டுக்கு பக்கத்து வீடு எங்க வீடு. பக்கத்து வீடுன்னு  சொல்லக்கூடாது. சரியாச் சொல்லணும்னா அடுத்த வீடு. அந்த வீட்ல ஒரு வயதான தம்பதிகள். அவங்கள  தேடி யாரும் வந்த மாதிரி இல்ல. பசங்க எல்லாம் வெளிநாட்டில இருப்பாங்க போல. நாங்க புதுசா கல்யாணம் ஆன இளம் ஜோடி. இனிமே தான் குழந்தை. வார நாட்களில் எங்க ரெண்டு பேருக்கும் வேலைக்கு போய்ட்டு வரவே சரியா இருக்கும். எப்படியோ எங்களுக்குள்ள பழக்கம் ஆகி ஒவ்வொரு sunday ஈவினிங்கும் அவங்க நந்தவனத்தில் தான் எங்களுக்கு காபி. காபி குடித்து விட்டு ஒரு மணி நேரசம்பாஷணைக்கு பின் தான் வீடு. நல்லா ரிலாக்ஸ்டா இருக்கும். அந்த சில்லென்ற குளிரி...