அந்தக் காலத்தில் ஒரு கல்லூரிப் பேராசிரியை வானொலியில் பேசிக் கொண்டிருந்தார் . பேசிக் கொண்டிருந்தார் என்று சொல்வதை விட ... அடித்து துவைத்து கிழித்துக் கொண்டிருந்தார் என்றே சொல்லலாம் . கடுமையாக அவர் அப்படி தாக்கிப் பேசிக் கொண்டிருந்தது – கண்ணதாசனை ..! ஆம் ... அடுக்கடுக்கான ஆதாரங்களோடு அந்தப் பெண் பேராசிரியர் வானொலியில் பேசிக் கொண்டிருந்தார் . இதோ .. அது பற்றி அந்தப் பேராசிரியப் பெண்ணே சொன்னது : " ஒரு முறை சென்னை வானொலியில் ' இலக்கியங்களும் திரைப்படப் பாடல்களும் ' என்ற தலைப்பில் ஒரு உரை நிகழ்த்த என்னை அழைத்திருந்தார்கள் . நான் உரை நிகழ்த்தியபோது , இலக்கியங்களில் சொல்லப்பட்ட பல விஷயங்களை கவிஞர் கண்ணதாசன் எப்படி தன் பாடல்களில் எடுத்துக் கையாண்டிருந்தார் என்பதைச் சொல்லி விளக்கி , கிட்டத்தட்ட கண்ணதாசன் பண்டைய இலக்கியங்களில் இருந்து நிறைய காப்பியடித்துள்ளார் என்கிற ரீதியில் என்னுடைய உரை நிகழ்த்தினேன் . ஒலிப்பதிவு செய்யப்பட்டு இரண்டு நாள் கழித்து என்னுடைய உரை வானொலியில் ஒலிபரப்பானது .” அவ்வளவுதான் ..! அடுக்கடுக்காக போன் கால்கள் ..! யார் யாரோ போன் செய்த...
This is a compilation of interesting stories,good quotes all taken from sources like Internet,Face Book etc. செய்திகள்.குட்டி கதைகள்,புகைப்படங்கள் சில நம் மனதினை தொட்டுவிடும்.ரசித்து படித்திட இந்த வலைப்பதிவு